< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் - கென்யாவைச் சேர்ந்தவர் கைது
|9 July 2024 5:53 PM IST
கொச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வந்த கென்யாவைச் சேர்ந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் சொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், போதைப்பொருள் கடத்தி வந்த கென்யாவைச் சேர்ந்த நபரை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.13 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் 200 கிராம் கொக்கேன் போதைப்பொருளை கேப்சூல் வடிவில் அந்த நபர் தனது அடிவயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வந்ததாகவும், 1,100 கிராம் கொக்கேன் போதைப்பொருளை திரவ வடிவில் மது பாட்டிலில் கடத்தி வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் முதல் முறையாக கொக்கேன் போதைப்பொருள் திரவ வடிவில் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.