< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மிசோரம் மாநிலத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்
|15 Oct 2023 6:14 AM IST
மிசோரம் மாநிலத்தில் மியான்மர் எல்லை அருகே ரூ.12 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐஸ்வால்,
மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தில் மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சோட் பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடினர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் அவர்கள் 40,400 மெத்தாம்பெட்டமைன் என்ற போதை மாத்திரைகளை வைத்திருந்தனர் அதன் மதிப்பு 12 கோடி ரூபாய்.
அவற்றை கைப்பற்றிய போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் அசாமின் கரீம்கஞ்ச் நகரைச் சேர்ந்த அல்தாப் உதீன் (வயது 32) மற்றும் அனம் உதீன் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.