< Back
தேசிய செய்திகள்
நடிகை சஞ்சனா கல்ராணி மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து
தேசிய செய்திகள்

நடிகை சஞ்சனா கல்ராணி மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து

தினத்தந்தி
|
25 Jun 2024 8:52 AM IST

நடிகை சஞ்சனா கல்ராணி மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு கல்யாண் நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் போதை விருந்து நடந்தது. இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி திரை பிரபலங்கள், தொழில் அதிபர்களின் குடும்பத்தினர் என பலரை கைது செய்தனர். இதில் அங்கீத் என்பவரும் ஒருவர் ஆவார்.

மேலும் போதை விருந்து தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் உள்பட பலரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக நடிகை சஞ்சனா கல்ராணி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் தயாரிப்பாளர் சிவபிரகாஷ் ஆகியோர் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் போதைப்பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்