டி.கே.நீர்வீழ்ச்சியில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
|டி.கே.நீர்வீழ்ச்சியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா அருகே ஜோதி பெட்டா வனப்பகுதியை ஒட்டி டி.கே. நீர் வீழ்ச்சி உள்ளது. நேற்று கல்லூரி மாணவர்கள் 15 பேர், டி.கே.நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக வந்திருந்தனர். அப்போது நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதிக்கு சென்ற மாணவர்களில் ஒருவர் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள், அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து பன்னரகட்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்ற போலீசார் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியானவர் பெங்களூரு ஜெயநகரை சேர்ந்த தீபக்குமார் என்பதும், தனியார் கல்லூரியில் பி.யூ.சி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.