< Back
தேசிய செய்திகள்
பஞ்சாபின் குர்தாஸ்பூரில் பாகிஸ்தானின் ஆளில்லா டிரோன் விமானத்தை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப் படையினர்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் பாகிஸ்தானின் ஆளில்லா டிரோன் விமானத்தை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப் படையினர்

தினத்தந்தி
|
24 April 2023 4:04 AM IST

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

குர்தாஸ்பூர்,

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தான் ஆளில்லா விமானம் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனையடுத்து அந்த டிரோன் விமானம், தேரா பாபா நானக் கிராமத்தில் வயலில் அறுவடை செய்யும் போது கிராம மக்களால் மீட்கப்பட்டது.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை, பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் பாரியல் கிராமம் அருகே பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதேபோன்ற ஒரு சம்பவத்தில், கடந்த ஏப்ரல் 16 அன்று அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள தானோ கலன் அருகே பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இடைமறித்து போதைப்பொருள் பாக்கெட்டுகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்