ரெயில் விபத்துக்கு முன் என்ன நடந்தது? என்ஜின் டிரைவர் பரபரப்பு தகவல்
|உத்தரபிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பலியாகினர்.
லக்னோ,
சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் ரெயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, ரெயில் விபத்தில் சிக்கும் முன்பாக பலத்த சத்தம் கேட்டதாக விபத்துக்குள்ளான ரெயிலின் லோகோ பைலட் கூறியுள்ளார். இதனால், தண்டவாளத்தில் ஏதேனும் பொருட்கள் கிடந்தததால் அதில் மோதி ரயில் தடம் புரண்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சதி செயல் எதுவும் காரணமா? எனவும் ரயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், விபத்துக்கு முன்பாக பயங்கர சத்தம் கேட்டதாக லோகோ பைலட் கூறியுள்ளார். இதனால், ரெயில் விபத்துக்கு ஏதேனும் சதி செயல் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு இருக்கிறார்கள்.