ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி: சிக்கமகளூருவில், பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்
|ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றியை சிக்கமகளூருவில், பழங்குடியின மக்கள் கொண்டாடினர்.
சிக்கமகளூரு;
நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியின் சார்பில் பழங்குடியினத்தை சோ்ந்த திரவுபதி முர்மு போட்டியிட்டார். எதிர்கட்சிகளின் வேட்பாளாராக யஷ்வந்த் சின்கா என்பவர் போட்டியிட்டார்.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றுமுன்தினம் நடந்து முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை கர்நாடகத்தில் உள்ள பா.ஜனதா கட்சியினர், பழங்குடியின மக்கள் வெகு விமரிசியாக கொண்டாடினர்.
இதேபோல் சிக்கமகளூரு மாட்டத்தில் தரிகெரே, கடூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களும், திரவுபதி முர்முவின் வெற்றியை கொண்டாடினர். அதன்படி சிக்கமகளூரு டவுன் அனுமந்தப்பா சர்க்கிள் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், திரவுபதி முர்முவின் வெற்றியை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.