திரவுபதி முர்மு வருகை எதிரொலி: பெங்களூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை
|ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார்.
பெங்களூரு,
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார். 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில் பெங்களூருவுக்கு ஜனாதிபதி வருகை தர உள்ளதால், பெங்களூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் பின்வருமாறு:-
பெங்களூரு கப்பன் பூங்கா மற்றும் அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (இன்று) காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை ராஜ்பவன் சாலையில் இருபக்க போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ரிச்மண்டு சாலை, இன்பென்டரி சாலை, கே.ஆர்.சாலை, கப்பன் சாலை, டிக்கென்சன் சாலை, எம்.ஜி.ரோடு, பழைய விமான நிலைய சாலை ஆகியவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (நாளை) காலை 9 மணி முதல் காலை 9.30 மணி வரை இன்பென்டரி சாலை, கே.ஆர்.சாலை, கப்பன் சாலை, எம்.ஜி.ரோடு, பழைய விமான நிலைய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.