< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் ஒருநாள் பயணம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு பொற்கோவிலில் வழிபாடு
தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் ஒருநாள் பயணம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு பொற்கோவிலில் வழிபாடு

தினத்தந்தி
|
10 March 2023 2:27 AM IST

பஞ்சாப்பில் ஒருநாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு பொற்கோவிலில் வழிபாடு செய்தார்.

அமிர்தசரஸ்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒரு நாள் பயணமாக பஞ்சாப் சென்றார். இதற்காக விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்ற அவர், அங்குள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்தார். மேலும் அங்கு சிறிது நேரம் அமர்ந்து கீர்த்தனை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார்.

ஜனாதிபதியுடன் முதல்-மந்திரி பகவந்த் சிங், சிரோமணி குருத்பாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹஜிந்தர் சிங் தாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், மத்திய மந்திரி சோம் பிரகாஷ், அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அஜ்லா உள்பட பலர் வரவேற்றனர்.

பொற்கோவிலில் வழிபட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு பின்னர் ஜாலியன் வாலாபாக், துர்கையனா கோவில் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றார்.

ஜனாதிபதி வருகையையொட்டி அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்