< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு: திடீரென ஏற்பட்ட தீயால், காவல் நிலையத்தில் பறிமுதல் செய்துவைத்திருந்த பல வாகனங்கள் எரிந்து சேதம்
|5 Jun 2022 12:03 PM IST
ஜம்முவில் காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பல வாகனங்கள் தீ விபத்தில் எரிந்து நாசமானது.
ஜம்மு,
ஜம்முவில் சத்வாரி காவல் நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பறிமுதல் செய்து வைத்திருந்த ஏழு கார்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
கைப்பற்றப்பட்ட வாகனங்கள் இருந்த திறந்த பகுதியில் அதிகாலை 1.50 மணியளவில் மேல்நிலை மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த நான்கு தீயணைப்பு வீரர்கள் தீயானது காவல் நிலைய கட்டிடத்திற்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டுவ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.