< Back
தேசிய செய்திகள்
இரட்டை இலை சின்னம் வழக்கு - இன்று உத்தரவு பிறப்பிப்பு
தேசிய செய்திகள்

இரட்டை இலை சின்னம் வழக்கு - இன்று உத்தரவு பிறப்பிப்பு

தினத்தந்தி
|
16 March 2024 8:04 AM IST

டெல்லி ஐகோர்ட்டு இன்று எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரனை பல கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. தேர்தல் நெருங்குவதால் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க புகழேந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டு இன்று எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

மேலும் செய்திகள்