< Back
தேசிய செய்திகள்
சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தம் தர வேண்டாம், என்னை கைது செய்யுங்கள் - மணிஷ் சிசோடியா

கோப்புப்படம்


தேசிய செய்திகள்

சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தம் தர வேண்டாம், என்னை கைது செய்யுங்கள் - மணிஷ் சிசோடியா

தினத்தந்தி
|
6 Sept 2022 1:08 AM IST

சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தம் தர வேண்டாம், என்னை கைது செய்யுங்கள் என்று டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை தர வேண்டாம் என்றும் வேண்டுமானால் என்னை கைது செய்து கொள்ளுங்கள் என்றும் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மது பான கொள்கை அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை முதல் மந்தரி மணிஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் டெல்லியில் பெரும் புயலை கிளப்பி உள்ள நிலையில், மணிஷ் சிசோடியா குறித்த ஸ்டிங் ஆப்ரேஷனை பாஜக வீடியோவாக வெளியிட்டுள்ளது. மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் அந்த வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, தம் மீது பொய்யான வழக்கு போட வேண்டும் என்று சிபிஐ அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். அதிகாரிகளுக்கு எதற்காக, இவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறிய மணிஷ் சிசோடியா, ஆபரேஷன் தாமரை தான் மத்திய அரசின் ஒரே வேலையா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்