< Back
தேசிய செய்திகள்
மந்திரி பதவி வேண்டாம்.. மக்களுக்கான பணி அதிகம் உள்ளது - சுரேஷ் கோபி
தேசிய செய்திகள்

மந்திரி பதவி வேண்டாம்.. மக்களுக்கான பணி அதிகம் உள்ளது - சுரேஷ் கோபி

தினத்தந்தி
|
6 Jun 2024 12:48 PM IST

கேரளாவுக்கான எனது திட்டங்கள் மந்திரிகளால் நிறைவேற்றப்பட வேண்டும் என சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி 4,12,338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பா.ஜனதா கால் பதித்தது. சுரேஷ் கோபியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளிதரன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில், திருச்சூரில் சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மந்திரி பதவி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியதாவது;

"மந்திரி பதவி வகிக்க எனக்கு விருப்பமில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு செய்யக்கூடிய பணிகள் அதிகம் உள்ளன. கேரள மக்களுக்கான திட்டத்தை நான் கொண்டு செல்லும்போது, சம்பந்தப்பட்ட மந்திரிகள் அதை செயல்படுத்த வேண்டும். அதையே நான் விரும்புகிறேன்.

திருச்சூரில் வெற்றிபெற்றதால் எனது பணி இங்கு மட்டும் நின்றுவிடாது. அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்