< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் குறித்து ஆவணப்படம் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தகவல்
|28 July 2023 5:20 AM IST
செங்கோலின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம் குறித்து ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மந்திரி அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
"செங்கோல் குறித்த ஆவணப்படம் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தால் தயாரிக்கப்பட்டது. செங்கோலின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம், தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் கொள்கைக் குறிப்பு ஆகியவையும் அதில் இடம் பெற்றுள்ளது.
செங்கோல் தொடர்பாக சமகால ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் கட்டுரைகளும் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டன. பல்வேறு புத்தகங்களில் இருந்தும் குறிப்புகள் எடுக்கப்பட்டன."
இவ்வாறு அதில் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.