< Back
தேசிய செய்திகள்
டாக்டர்கள் போராட்டம்: 2 மணிநேரத்திற்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
தேசிய செய்திகள்

டாக்டர்கள் போராட்டம்: 2 மணிநேரத்திற்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

தினத்தந்தி
|
18 Aug 2024 8:24 AM IST

கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் கொலை சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும் செய்திகள்