< Back
தேசிய செய்திகள்
ராணுவ அதிகாரி போல் நடித்து டாக்டரை ஏமாற்றி ரூ.93 ஆயிரம் மோசடி
தேசிய செய்திகள்

ராணுவ அதிகாரி போல் நடித்து டாக்டரை ஏமாற்றி ரூ.93 ஆயிரம் மோசடி

தினத்தந்தி
|
11 Sept 2022 5:34 AM IST

ராணுவ அதிகாரி போல் நடித்து டாக்டரை ஏமாற்றி ரூ.93 ஆயிரம் பணம் பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தூர்,

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவரிடம் ராணுவ அதிகாரி போல் நடித்து ஏமாற்றி ரூ.93 ஆயிரம் பணம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து திலக்நகர் காவல் நிலையப் பொறுப்பாளர் மஞ்சு யாதவ் கூறும்போது, மருத்துவர் ராஜ்குமார் மாத்தூர் (வயது 70) என்பவரிடம் குற்றம் சாட்டப்பட்டவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹவில்தாராக பணிபுரிவதாக கூறியுள்ளார்.

தன்னுடைய இளைய சகோதரருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ.60 ஆயிரம் தேவைப்படுவதாக கூறிய அவர், இந்தத் தொகையை ஆன்லைனில் மாற்றுவது குறித்த உரையாடலின் போது, 93,871 ரூபாயை மருத்துவரின் கணக்கிலிருந்து பறித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்