< Back
தேசிய செய்திகள்
கடன் தொல்லையால் மருத்துவ தம்பதி தற்கொலை... அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

கடன் தொல்லையால் மருத்துவ தம்பதி தற்கொலை... அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
20 Jan 2024 4:18 PM IST

உயிரிழந்த மருத்துவ தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தின் பினா நகரில் உள்ள நந்தன் காலனியை சேர்ந்தவர் பல்பீர். இவர் குர்வாயில் உள்ள சமூக சுகாதார மையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மஞ்சு, இவர் பினா சிவில் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் வெளியூரில் படித்து வருகிறார்.

பல்பீர் பண பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கியுள்ளார். கடன் சுமை அதிகரித்ததால் அதனை கட்ட இயலாத பல்பீர் தனது மனைவியுடம் இன்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பல்பீரின் மகன் வார விடுமுறைக்காக இன்று காலை தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் சென்ற அவர் தனது பெற்றோர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைதொடர்ந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பல்பீர் மற்றும் படுக்கையில் இறந்து கிடந்த மஞ்சுவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட ஆய்வில் மஞ்சு விஷம் அருந்தி அல்லது விஷ ஊசி செலுத்தி இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. பல்பீரின் அறையில் தற்கொலைக்கான குறிப்பு ஒன்று போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பில் நிலுவையில் உள்ள கடன் குறித்து இருவரும் கவலையடைந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்