< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் சிகிச்சைக்கு வந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது
|29 March 2023 5:05 AM IST
55 வயதான டாக்டர் தனது 4 வயது மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோனார்.
புதுடெல்லி,
டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஆதர்ஸ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 4 வயது பெண் குழந்தை வயிற்று வலியால் அவதிப்படுவதை அறிந்து, அவளை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
குழந்தையுடன் டாக்டரின் அறைக்கு சென்ற இளம்பெண், பணப்பையை வெளியே மறந்து வைத்து விட்டு வந்ததை உணர்ந்தார்.
இதையடுத்து அவர் டாக்டரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு பணப்பையை எடுக்க வெளியே சென்றார்.
பின்னர் அவர் மீண்டும் டாக்டர் அறைக்கு திரும்பியபோது அங்கு 55 வயதான டாக்டர் தனது 4 வயது மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோனார்.
உடனடியாக குழந்தையுடன் அங்கிருந்து வெளியேறிய இளம்பெண், டாக்டர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அந்த டாக்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.