< Back
தேசிய செய்திகள்
நான் யார் தெரியுமா...? போலீசாரிடம் நள்ளிரவில் குடிபோதையில் மோதிய நபர்
தேசிய செய்திகள்

நான் யார் தெரியுமா...? போலீசாரிடம் நள்ளிரவில் குடிபோதையில் மோதிய நபர்

தினத்தந்தி
|
12 Feb 2023 2:54 PM IST

உத்தர பிரதேசத்தில் ரோந்து சென்ற போலீசாரிடம் நள்ளிரவில் குடிபோதையில் மோதலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.



கான்பூர்,


உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் ஆடவர் ஒருவர் இரண்டு பெண்களுடன் நள்ளிரவில் சென்று உள்ளார். நகரில் பாதுகாப்புக்காக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பெண்களுடன் சென்ற அந்நபரை பார்த்து உள்ளனர்.

அவரை சந்தேகத்தின்பேரில் விசாரிப்பதற்காக போலீசார் தடுத்து, நிறுத்தி உள்ளனர். ஆனால், அவர் குடிபோதையில் இருந்து உள்ளார் என கூறப்படுகிறது.

அந்த நபர், தன்னை நிறுத்தியதற்காக போலீசாரை தள்ளி விட்டும், தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். போலீசாரிடம் தவறான அணுகுமுறையை கையாண்டார் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். எனினும், தன்னுடன் வந்த பெண்களில் ஒருவரை போலீசார் தள்ளி விட்டனர் என அந்நபர் குற்றம்சாட்டி உள்ளார். கல்யாண்பூர் உதவி கமிசனர் உத்தரவின்பேரில் அந்த நபரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்