< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியை ராவணன் உடன் ஒப்பிடுவதா? மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு பாஜக கண்டனம்
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை ராவணன் உடன் ஒப்பிடுவதா? மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு பாஜக கண்டனம்

தினத்தந்தி
|
29 Nov 2022 3:59 PM IST

குஜராத்தின் மகனை (பிரதமர் நரேந்திர மோடியை) காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

அகமதாபாத்,

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயும் நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அகமதாபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன் கார்கே பிரதமர் மோடியை கடுமையாக சாடியிருந்தார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜூன் கார்கே கூறுகையில், உங்கள் (மோடி) முகத்தை நாங்கள் எத்தனை முறைதான் பார்ப்பது என கேள்வி எழுப்பினார். "உங்களுக்கு எத்தனை வடிவங்கள் உள்ளன? உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் உள்ளதா?" என்றும் கார்கே கேள்வி எழுப்பினார்.

மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த ஒப்பீடுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத்தின் மகனை (பிரதமர் நரேந்திர மோடியை) காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்