< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்... ஆனால், தாய் மொழியை விட்டுவிடாதீர்கள் - அமித்ஷா
|19 March 2023 1:17 AM IST
தாய் மொழியை விட்டுவிடாதீர்கள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மகாராஜா சயோஜிராவ் பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது, சயரி ராயின் அணுகக்கூடிய கல்வி, சர்தார் வல்லபாய் படேலின் பெண்கள் முன்னேற்றம், அறிவை வளர்க்க கல்வி அம்பேத்காரின் எண்ணங்கள் தொடர்பான கருத்துக்கள் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் உங்கள் தாய் மொழியை மட்டும் விட்டுவிடாதீர்கள். உங்கள் தாய்மொழியால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டீர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே வாருங்கள். மொழி ஒரு உணர்வு' என்றார்.