வெளிநாட்டுச் சிறைகளில் தவிக்கும் இந்திய மீனவர்கள் குறித்து மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி
|மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் அதிகாரிகள் உதவுவதாக முரளிதரன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
வெளிநாட்டுச் சிறைகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களின் நிலை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன், ஈரானில் இதுவரை 15 இந்திய மீனவர்களும், இலங்கையில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மீனவர்கள் கைது குறித்த தகவல் கிடைத்தவுடன் அந்ததந்த நாடுகளின் தூதரகங்களை அணுகி மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுதாக அவர் குறிப்பிட்டார். சில வழக்குகளில் சட்ட உதவி அளிக்கப்படுவதாகவும், விசாரணையை விரைவில் முடித்து மீனவர்களை முன்கூட்டியே விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் அதிகாரிகள் உதவுவதாக முரளிதரன் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் முயற்சியால் இந்த ஆண்டில் இதுவரை 588 இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.