< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
"10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மத்திய மந்திரியிடம் திமுக எம்.பி. மனு
|27 July 2023 8:32 PM IST
மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரியிடம் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரியை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்தார். அப்போது அவர், சுங்கச்சாவடியை அகற்றுவது தொடராக நிதின் கட்கரியிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் அதில் அவர் தெரிவித்து உள்ளார்.