தி.மு.க. உடனான தொகுதிப் பங்கீடு விரைவில் கையெழுத்தாகும் - செல்வப்பெருந்தகை பேட்டி
|தி.மு.க. உடனான தொகுதிப் பங்கீடு விரைவில் கையெழுத்தாகும் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
புதுடெல்லி,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகையை கடந்த 17-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் நியமித்தது. அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவராக எஸ்.ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது செல்வப்பெருந்தகைக்கு மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தேரிவித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
தி.மு.க. உடனான தொகுதிப் பங்கீடு விரைவில் கையெழுத்தாகும். தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி என வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி. காங்கிரஸ் மேலிட தலைமையுடன் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.