வீடு முன்னால் தீபாவளி கடைகள்... ஆத்திரத்தில் அடித்து நொறுக்கிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள்
|உத்தர பிரதேசத்தில் வீடு முன்னால் தீபாவளி கடைகள் போட்ட ஆத்திரத்தில் அவற்றை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் அடித்து நொறுக்கியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் கோமதி நகரில் பத்திரகார்புரம் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலர் தெருவோரம் கடைகளை போட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதில், தீபாவளிக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மண் விளக்குகளை இளம்பெண் ஒருவர் திடீரென கம்புகளை கொண்டு வந்து அடித்து நொறுக்கியுள்ளார்.
அவரது வீட்டின் முன்னால் கடைகளை அமைத்து உள்ளனர். அந்த ஆத்திரத்தில் அவர், முதலில் தண்ணீரை கொண்டு வந்து அவர்கள் மீது வீசி எறிந்து உள்ளார். அதன்பின்னர், சென்று கம்புகளை கொண்டு வந்து, கடைகளை அடித்து நொறுக்கியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும், ஒவ்வொரு வருடமும் அந்த பகுதியில் கடைகளை போடுவது வழக்கம் என கடைக்காரர்கள் தெரிவித்து உள்ளனர். அந்த இளம்பெண் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகள் என தெரிய வந்துள்ளது.
இதுபற்றிய வீடியோ பரவிய நிலையில், போலீசார் அந்த இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். கடைக்காரர்களும் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.