< Back
தேசிய செய்திகள்
ரோட்ட பாத்து ஆட்டோ ஓட்ட சொன்னா, எங்கள பாத்தா ஓட்டுறீங்க - ஆட்டோக்காரர்களுக்கு இளம்பெண்கள் செக்..!
தேசிய செய்திகள்

'ரோட்ட பாத்து ஆட்டோ ஓட்ட சொன்னா, எங்கள பாத்தா ஓட்டுறீங்க' - ஆட்டோக்காரர்களுக்கு இளம்பெண்கள் செக்..!

தினத்தந்தி
|
31 Oct 2022 3:41 PM IST

பெண் பயணிகளை டிரைவர்கள் நோட்டமிடுவதால் ஆட்டோவில் முன்பக்க கண்ணாடியை நீக்க வேண்டும் என்று மராட்டிய அரசுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு அளித்துள்ளது.

மும்பை,

ஆட்டோவில் உள்ள முன்பக்க கண்ணாடி வழியாக ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவது அசவுகரியத்தை ஏற்படுத்துவதால் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை நீக்க உத்தரவிட வேண்டும் என்று மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகளிடம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு அளித்துள்ளது.

அரசு சார்பற்ற அமைப்பான வாட்ச்டாக் அறக்கட்டளையைச் சேர்ந்த வக்கீல் காட்ப்ரே பிமென்டா, அளித்துள்ள கடிதத்தில், ஆட்டோவில் உள்ள முன்பக்க கண்ணாடி வழியாக ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை டிரைவர்கள் நோட்டமிடுவதால், இளம்பெண்கள் பலரும் ஆட்டோவில் பயணம் செய்யும் போது அசவுகரியமாக உணர்வதாக கூறியுள்ளார்.

அதோடு, ஆட்டோ டிரைவர்களின் இத்தகைய செயலால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாதுகாப்பாக வண்டியை ஓட்ட, ஆட்டோவின் பக்கவாட்டு கண்ணாடிகளே போதுமானது என்பதால் அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்