< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டி.ஆர்.டி.ஓ. தலைவராக சமிர் வி.காமத் நியமனம் மத்திய அரசு நடவடிக்கை
|26 Aug 2022 6:02 AM IST
டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக புகழ்பெற்ற விஞ்ஞானி சமிர் வி.காமத்தை மத்திய அரசு நியமித்து உள்ளது.
புதுடெல்லி
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவராக இருப்பவர் சதீஷ் ரெட்டி. இவர் ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக புகழ்பெற்ற விஞ்ஞானி சமிர் வி.காமத்தை மத்திய அரசு நியமித்து உள்ளது.டி.ஆர்.டி.ஓ.வின் கடற்படை அமைப்பு மற்றும் தளவாடங்கள் துறையின் தலைவராக பணியாற்றி வரும் இவர், இனி டி.ஆர்.டி.ஓ.வின் தலைவராக இருப்பார்.
இந்த நியமன உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.