< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நண்பர்களுக்கு இடையே தகராறு; 3 பேர் படுகாயம்
|8 Oct 2022 12:15 AM IST
உப்பள்ளி அருகே நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உப்பள்ளி;
தார்வாா் மாவட்டம் உப்பள்ளி கசபா பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஆவேஷ். இவருக்கும் அவரது நண்பர் ஊவேஷ் உள்பட 2 பேருக்கும் இடையே மாட்டு கொட்டகை வாடகை விவகாரம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கத்தி, அரிவாளாலும் அவர்கள் தாக்கினர். இதில் ஆவேஷ் மற்றும் ஊவேஷ் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து கசபாபேட்டை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.