< Back
தேசிய செய்திகள்
செனட் உறுப்பினர்கள் பதவி நீக்கம் சிறுபிள்ளைத்தனமானது: கேரள கவர்னருக்கு ஐகோர்ட்டு கண்டனம்
தேசிய செய்திகள்

செனட் உறுப்பினர்கள் பதவி நீக்கம் சிறுபிள்ளைத்தனமானது: கேரள கவர்னருக்கு ஐகோர்ட்டு கண்டனம்

தினத்தந்தி
|
9 Dec 2022 3:09 AM IST

செனட் உறுப்பினர்கள் பதவி நீக்கம் சிறுபிள்ளைத்தனமானது என்று கேரள கவர்னருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும் அதிகார பனிப்போர் நிலவி வருகிறது. இந்தநிலையில் கேரள பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்கள் 15 பேரை பதவி நீக்கம் செய்து கடந்த அக்டோபர் மாதம் கவர்னர் உத்தரவிட்டார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் இந்த ஆணையை பிறப்பித்தார்.

பல்கலைக்கழக செனட் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பலமுறை உத்தரவிட்டும் கூட்டப்படாததால் உறுப்பினர்களை நீக்கியதாக ஆரிப் முகமதுகான் தெரிவித்தார்.

இதை எதிர்த்து செனட் உறுப்பினர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து வந்த ஐகோர்ட்டு, கவர்னரின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என விமர்சித்துள்ளது. உயர் பதவியில் உள்ளவர்கள் இதுபோன்று செயல்படக் கூடாது. சிறுகுழந்தை விளையாட்டை போல் வேந்தரின் செயல்பாடு உள்ளது. சொந்த விருப்பத்துக்கு ஏற்ப செனட் உறுப்பினர்களை நீக்குவது ஒரு காரணமாக இருக்கக்கூடாது. அதேநேரத்தில் செனட் உறுப்பினர்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்றும் சொல்ல முடியாது என்றும் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கருத்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்