பேரிடர் நிவாரண நிதி: தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு
|பேரிடர் மீட்புப் பணிகளுக்காக ரூ.7,532 கோடியை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.
புதுடெல்லி,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 280-ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட வகையான 12 பேரிடர்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான செலவினங்களை எதிர்கொள்வதற்காக இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது.
சமீபத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இன்று 22 மாநில அரசுகளுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.7,532 கோடியை வழங்கியுள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டிற்கு ₹450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
22 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிதியில் அதிகபட்சமாக மராட்டியத்திற்கு ரூ.1,420.80 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.712 கோடியும், ஒடிசா மாநிலத்திற்கு ரூ. 707.60 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்திற்கு ரூ.450 கோடியும்,
* ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும்,
* அருணாச்சல பிரதேசத்துக்கு ரூ.110.40 கோடியும்,
* அசாமுக்கு ரூ.340.40 கோடியும்,
* பீஹாருக்கு ரூ.624.40 கோடியும்,
* சத்தீஸ்கருக்கு ரூ.181.60 கோடியும்,
* கோவாவுக்கு 4.80 கோடியும்,
* குஜராத்துக்கு ரூ.580 கோடியும்,
* அரியானாவுக்கு ரூ.216.80 கோடியும்,
* இமாச்சல் பிரதேசத்துக்கு ரூ.180.40 கோடியும்,
* கர்நாடகாவுக்கு ரூ.348.80 கோடியும்,
* கேரளாவுக்கு ரூ.138.80 கோடியும்,
* மஹாராஷ்டிராவுக்கு ரூ.1420.80 கோடியும்,
* மணிப்பூருக்கு ரூ.18.80 கோடியும்,
* மேகாலயாவுக்கு ரூ.27.20 கோடியும்,
* மிசோரம் மாநிலத்திற்கு ரூ.20.80 கோடியும்,
* ஒடிசா மாநிலத்திற்கு ரூ.707.60 கோடியும்,
* பஞ்சாப்க்கு ரூ. 218.40 கோடியும்,
* தெலுங்கானாவுக்கு ரூ.188.80 கோடியும்,
* திரிபுராவுக்கு ரூ.30.40 கோடியும்,
* உத்தரபிரதேசத்துக்கு ரூ.812 கோடியும்,
* உத்தரகண்டுக்கு ரூ.413.20 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த நிதி பேரிடர்காலத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பெரிதும் உதவும். அதேபோல் பேரிடர் காலத்தை எதிர்கொள்ள உதவிக்கரமாக இருக்கும் என கூறப்படுகிறது.