< Back
மாநில செய்திகள்
சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை
மாநில செய்திகள்

சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை

தினத்தந்தி
|
30 Jan 2024 8:31 PM IST

சென்னை, பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலுக்கு தினசரி செல்கின்றனர்.

இந்நிலையில் சென்னை-அயோத்தி இடையேயான தினசரி விமான சேவையை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, மும்பை, பெங்களூர், ஆமதாபாத், பாட்னா, மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர் நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடக்கங்கப்பட உள்ளது.

முன்னதாக ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக அந்த நகரில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்