< Back
தேசிய செய்திகள்
டைனோசர்கள் கூட திரும்பி வரும், காங்கிரஸ் வராது - தேர்தல் தோல்வி குறித்து மத்திய மந்திரி கிண்டல்
தேசிய செய்திகள்

டைனோசர்கள் கூட திரும்பி வரும், காங்கிரஸ் வராது - தேர்தல் தோல்வி குறித்து மத்திய மந்திரி கிண்டல்

தினத்தந்தி
|
9 Oct 2024 5:52 PM IST

டைனோசர்கள் கூட திரும்பி வரும். காங்கிரஸ் வராது என்று தேர்தல் தோல்வி குறித்து மத்திய மந்திரி கிண்டல் செய்துள்ளார்.

சண்டிகர்,

அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக 48 தொகுதிகளில் வெற்றிபெற்று அம்மாநிலத்தில் 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. அதேவேளை, காங்கிரஸ் 37 தொகுதிகளை கைப்பற்றி தோல்வியடைந்தது.

இந்நிலையில், அரியானா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது குறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ரேவ்நத் சிங் பிட்டு கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக ரேவ்நத் கூறுகையில், டைனோசர்கள் கூட திரும்பி வரும், ஆனால் காங்கிரஸ் திரும்பி வராது' என்றார்.

மேலும் செய்திகள்