< Back
தேசிய செய்திகள்
மழை-வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்-மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் தூங்கினாரா?; காங்கிரஸ் கடும் தாக்கு
தேசிய செய்திகள்

மழை-வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்-மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் தூங்கினாரா?; காங்கிரஸ் கடும் தாக்கு

தினத்தந்தி
|
6 Sept 2022 8:46 PM IST

மழை-வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்-மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் மந்திரி ஆர்.அசோக் தூங்கினாரா? என்று காங்கிரஸ் கடுமையாக தாக்கி பேசியது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, ஹாசன், மண்டியா உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை-வெள்ளம் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தலைமையில் பெங்களூரு விதானசவுதாவில் மழை-வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அரசு அதிகாரிகள், வருவாய்த் துறை மந்திரி ஆர்.அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் போது மந்திரி ஆர்.அசோக் தூங்கியதாக கூறப்படுகிறது. தலையை கையால் தாங்கியபடி அவர் கண் மூடியபடி இருந்தார். இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பதிவில் மந்திரி ஆர்.அசோக்கை கிண்டல் செய்து கருத்து பதிவிட்டுள்ளது.

அதாவது, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மழை-வெள்ளத்தால் தத்தளிக்கிறது. மாநில மக்கள் மழையால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் மழை-வெள்ள பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மந்திரி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். முக்கியமான கூட்டத்தில் வருவாய்த்துறை மந்திரி இவ்வாறு இருப்பது கண்டித்தக்கது. கவலையே இல்லாதவர் தான் இப்படி நடந்து கொள்ள முடியும், பெங்களூருவை உலகத்தரத்திற்கு மாற்றுவோம் என்று கூறிய பா.ஜனதாவினர் தற்பொது பெங்களூருவை நீரில் மூழ்கும் நகரமாக மாற்றிவிட்டனர். பா.ஜனதா ஆட்சியில் பெங்களூரு அழிந்துவிட்டது. மழையால் தற்போது பெங்களூருவில் நிலவும் நிலைக்கு பா.ஜனதாவே காரணம். முதல்-மந்திரியும் இதற்கு பொறுப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்