< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திப்ருகர் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு.. உயிர் தப்பிய பயணிகள்!
|4 Jun 2023 2:53 PM IST
பெட்ரோலியத்துறை இணை மந்திரி உள்பட 150 பயணிகளுடன் திப்ருகர் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
கவுகாத்தி,
150 பயணிகளுடன் அசாம் மாநிலம் திப்ருகர் சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
விமானத்தின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக பைலட் அறிவித்ததையடுத்து, திப்ருகார் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் கவுஹாத்தியின் லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் இன்டர்நேஷனலுக்கு திருப்பி விடப்பட்டது.
இந்த விமானத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை மந்திரி ராமேஷ்வர் டெலி மற்றும் பாஜக எம்எல்ஏக்களான பிரசாந்த் புகான் மற்றும் தெராஷ் கோவாலா உட்பட 150 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்த விமானி உடனடியாக விமானத்தை கவுகாத்தியில் தரையிறக்கியதால் பயணிகள் உயிர் தப்பினர். தற்போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.