உத்தரகாண்ட்: பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை - முதல்-மந்திரி அறிவிப்பு
|பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழகங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 2 உதவித்தொகை திட்டங்களை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி அறிமுகப்படுத்தினார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழகங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 2 உதவித்தொகை திட்டங்களை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, சிறந்த மாணவர்களுக்கு 'ஜோதி உதவித்தொகை' மற்றும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு 'விஜய் உதவித்தொகை' என்ற 2 உதவித்தொகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவது மட்டுமல்லாமல், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை கொண்டுவருகின்றன. அவை உள்ளூர் அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவுகின்றன.
இந்த உதவித்தொகை மூலம் கிராமப்புறங்கள் மற்றும் எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.