< Back
தேசிய செய்திகள்
எல்லைகள் குறித்து யோசிக்காமல் பொதுமக்கள் புகார் அளித்ததும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
தேசிய செய்திகள்

எல்லைகள் குறித்து யோசிக்காமல் பொதுமக்கள் புகார் அளித்ததும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

தினத்தந்தி
|
6 Oct 2023 3:07 AM IST

எல்லைகள் குறித்து யோசிக்காமல் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் பேரில் முதலில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

எல்லைகள் குறித்து யோசிக்காமல் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் பேரில் முதலில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

முதலில் வழக்குப்பதிவு

பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் தயானந்த், துணை போலீஸ் கமிஷனர்களுடன் மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் ஆலோசனை நடத்தினார்.

அதே நேரத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் பேரில் போலீஸ் நிலையங்களில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

போலீசாருக்கு பயிற்சி

பொதுமக்கள் புகார் அளிக்க வந்தால் எல்லைகள் குறித்து யோசிக்காமல் முதலில் வழக்குப்பதிவு செய்துவிட்டு, அதன்பிறகு தங்களது எல்லையில் அந்த சம்பவம் நடைபெறவில்லை என்றால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் துணை போலீஸ் கமிஷனர்கள் கவனம் செலுத்தும்படியும் அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

வெளிவட்ட சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அங்குள்ள நிறுவனங்களில் வேலை நேரத்தை மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இதுதொடர்பாக ஐ.டி. நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் போக்குவரத்து போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சைபர் குற்றங்களை தடுக்க அனைத்து போலீஸ்காரர்களுக்கும் சைபர் கிரைம் பற்றிய பயிற்சி அளிக்கவும் டி.ஜி.பி. அலோக் மோகன் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்