< Back
தேசிய செய்திகள்
ஏர் இந்தியா நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஏர் இந்தியா நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தினத்தந்தி
|
27 Aug 2023 4:10 AM IST

ஏர் இந்தியா நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

விமான போக்குவரத்து நிறுவனங்களில் பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அவ்வப்போது தணிக்கை செய்து வருகிறது. அந்தவகையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

இதில் முக்கியமாக, விமான நிறுவனங்கள் வழக்கமாக 13 அம்ச பாதுகாப்பு சோதனையை மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் இத்தகைய அறிக்கை போலியாக இருந்ததாகவும், விமான பாதுகாப்பு தலைவரின் கையெழுத்து இல்லாமல் இருந்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

மும்பை, கோவா, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் இத்தகைய குறைபாடுகள் இருந்ததாக கூறியுள்ள அதிகாரிகள், அரியானாவின் குருகிராமிலும் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளனர். பயணிகளின் பாதுகாப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்