< Back
தேசிய செய்திகள்
திருப்பதி கோவிலில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
9 July 2023 3:39 PM IST

இன்று மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசன நேரம் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வார விடுமுறை இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று முன் தினம் முதல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

இலவச தரிசனத்துக்கு செல்லும் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பி ஷீலா தோரணம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்ற பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசன நேரம் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதியில் நேற்று 86,781 பேர் தரிசனம் செய்தனர். 44,920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.3.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

மேலும் செய்திகள்