< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்த பக்தர்கள் - 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
|19 Nov 2023 9:37 PM IST
வார இறுதி விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
அந்த வகையில் இன்று வார இறுதி விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருந்து நேரடியாக இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 24 மணிநேரம் சாமி தரிசனத்துக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.