< Back
தேசிய செய்திகள்
தொடர் விடுமுறையால் திருப்பதியில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம் - 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
தேசிய செய்திகள்

தொடர் விடுமுறையால் திருப்பதியில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம் - 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

தினத்தந்தி
|
28 Jan 2024 1:19 PM IST

பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காத்திருப்பு நேரம் மேலும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், தற்போது தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை முதல் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

இதனால் வைகுண்டம் காத்திருப்பு காம்பிளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை முதல் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளதால் தரிசன நேரம் அதிகமாகும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மேலும் செய்திகள்