< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதியில் வார நாட்களிலும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ரூ.5.5 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
|13 July 2022 10:24 PM IST
திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. வார இறுதிகளில் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
அதே போல் தற்போது வார நாட்களிலும், ரூ.300 கட்டண தரிசனத்திற்காக 5 மணி நேரமும், இலவச தரிசனத்திற்காக 12 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும், உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக திருப்பது தேவஸ்தானம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.