< Back
தேசிய செய்திகள்
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
தேசிய செய்திகள்

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

தினத்தந்தி
|
8 July 2023 5:56 PM IST

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்