< Back
தேசிய செய்திகள்
புதுவை ஆராய்ச்சி மையத்தில் சிக்குன்குனியாவை தடுக்கும் கொசுக்கள் உருவாக்கம்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

புதுவை ஆராய்ச்சி மையத்தில் சிக்குன்குனியாவை தடுக்கும் கொசுக்கள் உருவாக்கம்

தினத்தந்தி
|
7 July 2022 9:53 AM IST

மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தில் டெங்கு, சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் வைரஸ் இல்லா கொசுக்கள் உருவாக்கபட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு டெங்கு, சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் வைரஸ் இல்லா கொசுக்கள் உருவாக்கபட்டுள்ளது.

ஆண் வகை கொசுக்களுடன் புதிய வகை பெண் கொசுக்கள் இணையும் போது வைரஸ் இருக்காது. டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் இந்த பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளனர். இதற்கு வல்வாசியா என பெயரிடப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து இந்த அறியவகை கொசுக்களை உற்பத்தி செய்துள்ளனர். இதன் ஆராய்ச்சி முடிவுகளை விரையில் வெளியிட இந்திய ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்