< Back
தேசிய செய்திகள்
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் தேவஸ்தானம் அறிவிப்பு
தேசிய செய்திகள்

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் தேவஸ்தானம் அறிவிப்பு

தினத்தந்தி
|
26 Oct 2023 6:45 PM IST

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவில் நடை 8 மணி நேரம் அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 29-ந் தேதி சந்திர கிரகணம் என்பதால், நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 7.05 மணி முதல் 29-ந் தேதி அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.

அதன் பின்னர் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, ஏகாந்தத்தில் சுத்தி, சுப்ரபாத சேவை செய்த பிறகு காலை 5.15 மணிக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் ஏழுமலையான் கோவில் நடை சுமார் 8 மணி நேரம் வரை சாத்தப்படும்.மேலும் நாளை சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும். திருமலையில் உள்ள அனைத்து தலங்களிலும் அன்ன பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்படும். இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது திருமலை யாத்திரையை திட்டமிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்