< Back
தேசிய செய்திகள்
தேவராஜா மார்க்கெட், ேலண்ட்ஸ் டவுன் கட்டிடங்களை இடிக்க வேண்டும்
தேசிய செய்திகள்

தேவராஜா மார்க்கெட், ேலண்ட்ஸ் டவுன் கட்டிடங்களை இடிக்க வேண்டும்

தினத்தந்தி
|
7 Oct 2023 12:15 AM IST

மைசூருவில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட தேவராஜா மார்க்கெட், லேண்ட்ஸ் டவுன் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முன்னாள் மேயர்கள் வலியுறுத்தி உள்ளனா்.

மைசூரு

மைசூரு டவுனில் தேவராஜா மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் அருகே லேண்ட்ஸ் டவுன் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடங்கள் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்தநிலையில் இந்த கட்டிடங்கள் பாழடைந்து கிடக்கின்றன.

இந்த கட்டிடங்களை இடித்துவிட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்னாள் மேயர் சங்கத்தினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- தேவராஜா மார்க்கெட், லேண்ட்ஸ் டவுன் கட்டிடம் கட்டி 125 ஆண்டுகள் இருக்கும். இந்த கட்டிடங்கள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் கட்டிடம் இடிந்து விழுந்து கிடக்கின்றன. மழை பெய்யும் சமயத்தில் கட்டிடம் விழுந்து விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லேண்ட்ஸ் டவுன் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு வியாபாரம் செய்தவர்களுக்கு தற்காலிகமாக எதிரே உள்ள கட்டிடத்தில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் அதன் பின்னர் அந்த கட்டிடத்தில் எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. இந்தநிலையில் மைசூரு அழகை குறைப்படுத்தும் வகையில் தேவராஜா மார்க்கெட், லேண்ட்ஸ் டவுன் கட்டிடங்கள் உள்ளதால் அதனை இடித்து விட்டு புதியதாக கட்ட முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட வேண்டும். என்றனர்.

மேலும் செய்திகள்