12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய தேவனூர் குளம்; உடைப்பு ஏற்பட்டதால் பயிர்கள் நாசம்
|கனமழையால் 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய தேவனூர் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் பயிர்கள் நாசமானது.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் என அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால் அந்த பகுதியில் உள்ள தேவனூர் குளம் நிரப்பி உள்ளது. சுமார் 12 ஆண்டுகள் கழித்து இந்த குளம் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குளத்தின் ஒரு பக்க கரைப்பகுதியில் லேசான உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களை சூழ்ந்துள்ளது. மேலும், சாகுபடிக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.