< Back
தேசிய செய்திகள்
ஜனாதிபதி பங்கேற்காதது, குடியரசை மதிப்பிழக்கச்செய்யும் - கபில் சிபல் கருத்து
தேசிய செய்திகள்

ஜனாதிபதி பங்கேற்காதது, குடியரசை மதிப்பிழக்கச்செய்யும் - கபில் சிபல் கருத்து

தினத்தந்தி
|
25 May 2023 9:32 PM GMT

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்காதது, குடியரசை மதிப்பிழக்கச்செய்யும் என்று கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியே திறப்பது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை உருவாக்கி, விவாதப்பொருள் ஆகி உள்ளது.

இது குறித்து முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்படுகிறது. நாடாளுமன்றம் நமது குடியரசை அடையாளம் காட்டுகிறது. குடியரசின் தலைவர், ஜனாதிபதிதான். இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில், ஜனாதிபதி கலந்து கொள்ளாதது, நாடாளுமன்ற நெறிமுறைகளை மதிப்பிழக்கச்செய்வதாகத்தான் அமையும். அரசு கண்டுகொள்ளுமா?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்