தேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்களின் விவரம்
|தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
புதுடெல்லி,
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. அதில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2024 பிப்ரவரி 15-ந்தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்கள், நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பெறப்பட்ட தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி 'பியூச்சர் கேமிங் & ஓட்டல் சர்வீசஸ்' என்ற நிறுவனம் இந்தியாவிலேயே அதிகாக தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அதிகமாக தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்பு குறித்த பட்டியல் பின்வருமாறு;-
* பியூச்சர் கேமிங் & ஓட்டல் சர்வீசஸ் - ரூ.1,368 கோடி
* மேகா இன்ஜினியரிங் & இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் - ரூ.966 கோடி
* குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் - ரூ 410 கோடி
* வேதாந்தா லிமிடெட் - 400 கோடி
* ஹால்டியா எனர்ஜி லிமிடெட் - ரூ.377 கோடி
* பாரதி குழுமம் - ரூ.247 கோடி
* எஸ்ஸல் மைனிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் - ரூ.224 கோடி
* மேற்கு உ.பி. பவர் டிரான்ஸ்மிஷன் - ரூ.220 கோடி
* கெவென்ட்டர் புட்பார்க் இன்ப்ரா லிமிடெட் - ரூ.194 கோடி
* மதன்லால் லிமிடெட் - ரூ 185 கோடி
* டி.எல்.எப். குழுமம் - ரூ.170 கோடி
* யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - ரூ.162 கோடி
* உட்கல் அலுமினா இன்டர்நேஷனல் - ரூ.145.3 கோடி
* ஜிண்டால் ஸ்டீல் & பவர் லிமிடெட் - ரூ.123 கோடி
* பிர்லா கார்பன் இந்தியா - ரூ.105 கோடி
* ருங்டா சன்ஸ் - ரூ.100 கோடி
* டாக்டர் ரெட்டிஸ் - ரூ.80 கோடி
* பிரமல் எண்டர்பிரைசஸ் குழுமம் - ரூ.60 கோடி
* நவ்யுகா இன்ஜினியரிங் - ரூ.55 கோடி
* ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் - ரூ.40 கோடி
* சிப்லா லிமிடெட் - ரூ 39.2 கோடி
* லட்சுமி நிவாஸ் மிட்டல் - ரூ.35 கோடி
* கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் -ரூ 33 கோடி
* ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் - ரூ.30 கோடி
* பஜாஜ் ஆட்டோ - 25 கோடி
* சன் பார்மா லேப்ரட்டரீஸ் - ரூ.25 கோடி
* மேன்கைண்ட் பார்மா - ரூ.24 கோடி
* பஜாஜ் பைனான்ஸ் - ரூ.20 கோடி
* மாருதி சுஸுகி இந்தியா - ரூ.20 கோடி
* அல்ட்ராடெக் - ரூ.15 கோடி
* டி.வி.எஸ். மோட்டார்ஸ் - ரூ.10 கோடி
* எடெல்வீஸ் குழுமம் - ரூ.4 கோடி