< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு மாநகராட்சியில் 243 வார்டுகளின் விவரங்கள்; ஆட்சேபனை தெரிவிக்க 15 நாட்கள் காலஅவகாசம்
தேசிய செய்திகள்

பெங்களூரு மாநகராட்சியில் 243 வார்டுகளின் விவரங்கள்; ஆட்சேபனை தெரிவிக்க 15 நாட்கள் காலஅவகாசம்

தினத்தந்தி
|
24 Jun 2022 3:14 AM IST

பெங்களூரு மாநகராட்சியில் 243 வார்டுகள் குறித்த விவரங்கள் அடங்கிய அரசாணையை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது. ஆட்சேபனை தெரிவிக்க 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பேட்ராயனபுரா

பெங்களூரு மாநகராட்சியில் தற்போது 198 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக அரசு உயர்த்தியது. இதையடுத்து மாநகராட்சி தலைமை கமிஷனர் தலைமையில் வார்டு மறுவரையறை குழு அமைத்து அரசு உத்தரவிட்டது. அந்த குழு வார்டுகளை மறுவரையறை செய்து அரசுக்கு அறிக்கை வழங்கியது. இந்த அறிக்கையை அரசு ஏற்று அதை அரசாணை பிறப்பித்துள்ளது. 243 வார்டு விவரங்கள் பின்வருமாறு:-

1.கெம்பேகவுடா, 2.சவுடேஸ்வரி, 3.சோமேஸ்வரா, 4.அட்டூர், 5.எலகங்கா சேட்டிலைட், 6.கோகிலு, 7.தனிசந்திரா, 8.ஜக்கூர், 9.அம்ருதஹள்ளி, 10.கெம்பாபுரா, 11.பேட்ராயனபுரா, 12.கொடிகேஹள்ளி, 13.தொட்டபொம்மசந்திரா, 14.வித்யாரண்யபுரா, 15.குவெம்புநகர், 16.கம்மகொண்டனஹள்ளி, 17.செட்டிஹள்ளி, 18.பகலகுன்டே, 19.டிபன்ஸ் காலனி, 20.மல்லசந்திரா, 21.டி.தாசரஹள்ளி, 22.சொக்கசந்திரா, 23.நீலகதிரேனஹள்ளி, 24.ராஜகோபால்நகர், 25.ஆர்.ஆர்.நகர், 26.எக்கனஹள்ளி, 27.சுங்கதகட்டே, 28.அன்ரடஹள்ளி, 29.வித்யமன்யநகர், 30.ஹீரோஹள்ளி, 31.தொட்டகொல்லஹட்டி, 32.உல்லால், 33.கெங்கேரி உபநகர், 34.பன்டேமட்.

மகாலட்சுமிபுரம்

35.தலகட்டபுரா, 36.கன்னீஸ்வராராம், 37.வீரமதகரி, 38.ஜே.பி.பார்க், 39.சணக்கியா, 40.சத்ரபதி சிவாஜி, 41.பீனியா, 42.லட்சுமிதேவிநகர், 43.ரனதீரகன்டீரவா, 44.வீரசிந்தூர லட்சுமணா, 45.விஜயநகர் கிருஷ்ண தேவராயா, 46.சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா, 47.நால்வடி கிருஷ்ணராஜ உடையார் பூங்கா, 48.ஞானபாரதி, 49.ராஜராஜேஸ்வரி நகர், 50.மாரப்பனபாளையா, 51.நாகபுரா, 52.மகாலட்சுமிபுரம், 53.நந்தினி லே-அவுட், 54.ஜெய்மாருதி நகர், 55.காவேரிநகர், 56.சங்கரமடம், 57.சக்திகணபதி நகர், 58.விருசபாவதிநகர், 59.மத்திகெரே, 60.அரண்மனை நகர், 61.மல்லேஸ்வரம், 62.சுப்பிரமணியாநகர், 63.காயத்திரிநகர், 64.காடுமல்லேஸ்வரா, 65.ராஜ்மகால் குட்டஹள்ளி, 66.ராதாகிருஷ்ண கோவில், 67.சஞ்சய்நகர்.

68.விஸ்வநாத் நாகேனஹள்ளி, 69.சோழநகர், 70.ஹெப்பால், 71.சாமுண்டிநகர், 72.கங்காநகர், 73.ஜெயசாமராஜேந்திரா நகர், 74.காவல் பைரசந்திரா, 75.குஷால்நகர், 76.முனீஸ்வராநகர், 77.மோடி கார்டன், 78.எஸ்.கே.கார்டன், 79.சகாயபுரம், 80.புலிகேசிநகர், 81.ஹொரமாவு, 82.பாபுசாபாளையா, 83.கல்கெரே, 84.கவுடேனஹள்ளி, 85.விஜினாபுரா, 86.கே.ஆர்.புரம், 87.தம்புசெட்டிபாளையா, 88.பசவனபுரா, 89.தேவசந்திரா, 90.மகாதேவபுரா, 91.ஏ.நாராயணபுரா, 92.விஞ்ஞானநகர்.

பிரகாஷ்நகர்

93.எச்.ஏ.எல். விமான நிலையம், 94.ஹெண்ணூர், 95.கோவிந்தபுரா, 96.கே.ஜி.ஹள்ளி, 97.வெங்கடேசபுரா, 98.கட்சிகாரனஹள்ளி, 99.எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட், 100.பானசவாடி, 101.கம்மனஹள்ளி, 102.லிங்கராஜபுரா, 103.மாருதிசேவாநகர், 104.காடுகோடி, 105.பெலதூர், 106.ஹூடி, 107.கருடாச்சார்பாளையா, 108.தொட்டநெக்குந்தி, 109.ஏ.இ.சி.எஸ். லே-அவுட், 110.ஒயிட்பீல்டு, 111.ஹகதூர், 112.வர்த்தூர், 113.முனேக்கொலாலா, 114.மாரத்தஹள்ளி, 115.பெல்லந்தூர், 116.தொட்டகானஹள்ளி, 117.சி.வி.ராமன்நகர், 118.லால்பகதூர்நகர், 119.நியூ பையப்பனஹள்ளி, 120.ஹொய்சாலாநகர், 121.பழைய திப்பசந்திரா.

122.புதிய திப்பசந்திரா. 123.ஜலகண்டேஸ்வராநகர், 124.ஜீவன்பீமாநகர், 125.கோனேனஅக்ரஹாரா, 126.ராமசாமிபாளையா, 127.ஜெயமஹால், 128.வசந்த்நகர், 129.சம்பங்கிராம்நகர், 130.பாரதிநகர், 131.அல்சூர், 132.தத்தாத்ரேயா கோவில், 133.காந்திநகர், 134.சுபாஷ்நகர், 135.ஒகலிபுரம், 136.பின்னிபேட்டை, 137.காட்டன்பேட்டை, 138.சிக்பேட்டை, 139.தயானந்த்நகர், 140.பிரகாஷ்நகர், 141.ராஜாஜிநகர், 142.ஸ்ரீராமந்திர், 143.சிவாஜிநகர், 144.பசவேஸ்வராநகர், 145.காமாட்சிபாளையா.

குமாரசாமி லே-அவுட்

146.டாக்டர் ராஜ்குமார் வார்டு, 147.அக்ரஹாரா தாசரஹள்ளி, 148.கோவிந்த்ராஜ்நகர், 149.காவேரிபுரா, 150.மாரேனஹள்ளி, 151.மாருதிமந்திர் வார்டு, 152.மூடலபாளையா, 153.கல்யாண்நகர், 154.நாகரபாவி, 155.நாயண்டஹள்ளி, 156.கெம்பாபுரா அக்ரஹாரா, 157.விஜயநகர், 158.ஒசஹள்ளி, 159.ஹம்பிநகர், 160.பாபுஜிநகர், 161.அத்திகுப்பே, 162.காலிஆஞ்சனேயா கோவில், 163.வீரபத்ராநகர், 164.ஆவலஹள்ளி, 165.சாம்ராஜ்பேட்டை, 166.சலவாதிபாளையா, 167.ஜெகஜீவன்ராம்நகர், 168.பாதராயனபுரா, 169.தேவராஜ்அர்ஸ் நகர், 170.ஆசாத்நகர், 171.சுதாமநகர், 172.தர்மராயசாமி கோவில், 173.சுங்கேனஹள்ளி, 174.விஸ்வேசபுரம், 175.அசோகபில்லர், 176.சோமேஸ்வராநகர், 177.ஹொம்பேகவுடாநகர், 178.டொம்ளூர், 179.ஜோகுபாளையா, 180.வண்ணாரப்பேட்டை, 181.சாந்தலாநகர், 182.சாந்திநகர், 183.ஆஸ்டின்டவுன், 184.நீலசந்திரா.

185.ஈஜிபுரா, 186.கோரமங்களா, 187.ஆடுகோடி, 188.லக்கச்சந்திரா, 189.சுத்தகுன்டேபாளையா, 190.மடிவாளா, 191.ஜக்கசந்திரா, 192.பி.டி.எம். லே-அவுட், 193.என்.எஸ்.பாளையா, 194.குரப்பனபாளையா, 195.திலக்நகர், 196.பைரசந்திரா, 197.சாகாம்பரிநகர், 198.ஜே.பி.நகர், 199.சாரக்கி, 200.எடியூர், 201.உமாமகேஸ்வரி, 202.கணேசமந்திர் வார்டு, 203.பனசங்கரி கோவில், 204.குமாரசாமி லே-அவுட், 205.விக்ரம்நகர், 206.பத்மநாபநகர், 207.காமாக்கியநகர், 208.தீனதயாள்வார்டு, 209.ஒசகெரேஹள்ளி, 210.பசவனகுடி, 211.ஹனுமந்தநகர், 212.சீனிவாசநகர், 213.ஸ்ரீநகர், 214.கிரிநகர், 215.கத்திரிகுப்பே, 216.வித்யாபீட வார்டு, 217.உத்தரஹள்ளி, 218.சுப்பிரமணியபுரா, 219.வசந்தபுரா.

பிளேக்ஹள்ளி

220.கனகநகர், 221.எலச்சினஹள்ளி, 222.ஆர்.பி.ஐ.லே-அவுட், 223.சுஞ்சகட்டா, 224.அஞ்சனபுரா, 225.கொட்டிகெரே, 226.காலேனஅக்ரஹாரா, 227.பேகூர், 228.நாகநாதபுரா, 229.இப்ளூர், 230.அகரா, 231.மங்கம்மனபாளையா, 232.எச்.எஸ்.ஆர்.லே-அவுட், 233.ரூபேனஅக்ரஹாரா, 234.ஹொங்கசந்திரா, 235.பொம்மனஹள்ளி, 236.தேவரசிக்கனஹள்ளி, 237.பிளேக்ஹள்ளி, 238.அரகெரே, 239.உலிமாவு, 240.விநாயகர்நகர், 241.சாரக்கி ஏரி, 242.ஜரகனஹள்ளி, 243.கூட்லு.

ஆட்சேபனை தெரிவிக்கலாம்

இந்த புதிய வார்டுகள் மறுசீரமைப்பு தொடர்பாக யாருக்காவது அதாவது தனிநபருக்கோ அல்லது அமைப்புகளுக்கோ ஆட்சேபனை இருந்தால் அதுபற்றி 15 நாட்களுக்குள் நகர வளர்ச்சி அரசின் கூடுதல் தலைமை செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என்று அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வார்டு மறுவரையறை அறிக்கை அரசாணையில் வெளியாகி இருப்பதன் மூலம் மாநகராட்சிக்கு அடுத்த ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெறுவது உறுதி என்று கூறப்படுகிறது. இந்த 15 நாட்களுக்கு பிறகு இறுதி வார்டு விவரங்கள் வெளியிடப்படும். அதன் பிறகு தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்