< Back
தேசிய செய்திகள்
மோட்டார் சைக்கிள்களின் சைலன்சர்கள் அழிப்பு; போலீசார் நடவடிக்கை
தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள்களின் 'சைலன்சர்கள்' அழிப்பு; போலீசார் நடவடிக்கை

தினத்தந்தி
|
28 Jun 2022 9:24 PM IST

சிக்கமகளூரு டவுனில், அதிக ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள்களின் சைலன்சர்களை போலீசார் அழித்தனர்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு டவுன் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்த 5 பேரை, பசவனஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் அந்த மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த சைலன்சர்களை போலீசார் அகற்றினர். இந்த நிலையில் இதுவரை மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்புவதாக அகற்றப்பட்ட 15 சைலன்சர்களை அழிக்க போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று போலீசார், 15 சைலன்சர்களை சாலையில் அடுக்கி வைத்து அதில் ரோடு ரோலர் வாகனத்தை ஏற்றி அழித்தனர். மேலும் இனிமேல் மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்